#பலவீனமான_செய்தி👇
قال ابن كثير رحمه الله :
" روينا من طريق ابن لهيعة عن قيس بن الحجاج عمن حدثه قال : لما افتتحت مصر أتى أهلها عمرو بن العاص - حين دخل بؤونة من أشهر العجم – فقالوا : أيها الأمير ، لنيلنا هذا سنة لا يجري إلا بها . قال: وما ذاك ؟ قالوا: إذا كانت اثنتي عشرة ليلة خلت من هذا الشهر عمدنا إلى جارية بكر من أبويها ، فأرضينا أبويها وجعلنا عليها من الحلي والثياب أفضل ما يكون، ثم ألقيناها في هذا النيل .
فقال لهم عمرو : إن هذا مما لا يكون في الإسلام ، إن الإسلام يهدم ما قبله .
قال : فأقاموا بؤونة وأبيب ومسرى والنيل لا يجري قليلا ولا كثيرا ، حتى هموا بالجلاء ، فكتب عمرو إلى عمر بن الخطاب بذلك ، فكتب إليه : إنك قد أصبت بالذي فعلت ، وإني قد بعثت إليك بطاقة داخل كتابي ، فألقها في النيل .
فلما قدم كتابه أخذ عمرو البطاقة فإذا فيها " من عبد الله عمر أمير المؤمنين إلى نيل أهل مصر : أما بعد ، فإن كنت إنما تجري من قبلك ومن أمرك فلا تجر فلا حاجة لنا فيك ، وإن كنت إنما تجري بأمر الله الواحد القهار ، وهو الذي يجريك فنسأل الله تعالى أن يجريك "
قال : فألقى البطاقة في النيل ، فأصبحوا يوم السبت وقد أجرى الله النيل ستة عشر ذراعا في ليلة واحدة ، وقطع الله تلك السنة عن أهل مصر إلى اليوم " انتهى من "البداية والنهاية" (7 /114-115)
ஹிஜ்ரி 20-ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ரு பின் அல் – ஆஸ் (ரலி) அவர்களிடம் அங்குள்ள கிறஸ்தவத் தலைவர்கள் வந்தனர். ஒரு முக்கியப் பிரச்னையைக் கவர்னரிடம் கூறினர்.
எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியைச் சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப் படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிராதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும்.
ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று இரவு ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பர். மணப்பெண் போல் அவளை அலங்கரிப்பர். அதன்பின் அவளை அந்த நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில், அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.
கவர்னர் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக மறுமொழி பகிர்ந்தார்கள்: “இந்த மூடப்பழக்கப் பலியை நீங்கள் விட்டு விட வேண்டும். நான் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்!”
இஸ்லாம் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் புதைகுழிக்குள் தள்ளி விடுகின்றது. அறியாமையினால் செய்யப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களையும் அகற்றி விடுகின்றது. இதையெல்லாம் நன்கறிந்த அந்த நபித்தோழரின் வாயிலிருந்து இதைத் தவிர வேறென்ன மறுமொழி வரும்?
ஏமாற்றத்தோடு அந்தக் கிறிஸ்தவர்கள் திரும்பினர். நாட்கள், வாரங்கள், மாதங்கள் கழிந்தன! நைல் நதியின் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்தது. ஆனாலும் அந்தப் புதிய ஆட்சியாளர்கள் மனிதர்களைப் பலியிடும் அந்தக் கொடூரப் பழக்கத்தை அனுமதிக்கவில்லை.
நைல் நதியைத் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக நம்பி வாழ்பவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சிலர் பிழைப்புக்காக அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தனர்.
கவர்னர் அம்ரு பின் அல் – ஆஸ் (ரலி) அவர்கள் இதனால் சற்றே கலக்கமுற்றார்கள். இதனை விவரித்து அன்றைய கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு மடல் வரைந்து அனுப்பினார்கள்.
“நீங்கள் சரியானதையே செய்துள்ளீர்கள்!” என்று கலீஃபாவிடமிருந்து பதில் வந்தது. “இஸ்லாம் அறியாமையால் செய்யப்படும் சடங்குகளை அழிக்கவே இவ்வுலகில் முகிழ்த்தது. நான் இத்துடன் ஒரு குறிப்பை அனுப்புகிறேன். அதனை நைல் நதியில் போட்டு விடவும்” என்று கலீஃபா அவர்கள் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள்.
நைல் நதிக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமே அந்தக் குறிப்பு. அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது: “உமரிடமிருந்து எகிப்தின் நைல் நதிக்கு. நீ உனது சொந்த முயற்சியில் ஓடிக் கொண்டிருந்தால், இப்பொழுதே நீ ஓடுவதை நிறுத்தி விடு. ஆனால் அது தனியோன், தம்பிரான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்றால் நாங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்வோம்: ‘யா அல்லாஹ்! நீ இந்த நதியை ஒலித்தோடச் செய்வாயாக!’’
அந்தக் கடிதத்தை அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி) அவர்கள் நைல் நதியில் போட்டார்கள்.
என்னே ஆச்சரியம்…!
அடுத்த நாளிலிருந்து நைல் நதி ஒலித்தோடத் துவங்கிற்று. இதனை வரலாற்றாசிரியர் இப்னு தஃக்ரி பெர்தீ எழுதுகிறார். (ஆதாரம்: அன்-நஸீமுஸ் ஸாஹிரா ஃபீ அஃக்பார் முலுகே மிஸ்ர வல் காஹிரா, பாகம் 1, பக். 35)
இப்னு கஸீர் நூல்: அல் பிதாயஃ வன்னிஹாயஃ : பாகம் :7 பக்கம் :114,115 வருகின்றன.
இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், யஹ்யா பின் சயீத், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஹைஸமீ ஆகியோர் கூறியுள்ளனர்.
5388 - سمعت يحيى يقول بن لهيعة لا يحتج
بحديثه - تاريخ ابن معين - رواية الدوري 4 /481
இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 481
قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا... قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا - المجروحين - ابن حبان 2 /12
"இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்' என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். "நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார்' என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.
நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 14
மேலும்
وقيس بن الحجاج صدوق من الطبقة السادسة عند الحافظ ابن حجر ، وهم الذين لم يثبت لهم لقاء أحد من الصحابة . انظر : "تقريب التهذيب" (1 /25) .
அத்துடன் இந்த அறிவிப்பாளர் வரிசையில் "கைஸ் இப்னுல் ஹஜ்ஜாஜ்" எனும் எந்த நபித்தோழரையும் சந்திக்காத ஒருவர் என்று இப்னு ஹஜர் கூறிவுள்ளார்கள்
தர்கீபுத் தஹ்தீப் 1/25
குறித்த கைஸ் என்பவர் நபித்தோழர்களை சந்திகாத நபர் என்பதனாலும் "இவருக்கு யார் இந்த செய்தியை அறிவித்தார் என்ற விபரம் இல்லாமல் இச்செய்து பலவீனம் ஆகின்றன