முகநூலிலும் வாட்ஸ்அப்பிலும் இப்டி ஒரு கப்ஸா செய்தி பரவலாக பல நாள்க்கலாக பரப்பப்பட்டு வருகின்றது இன்று இந்த செய்திக்கு மறுப்பு☺
👇👇
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல்
உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.
2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல்
உறங்காதே.
3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.
4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல்
உறங்காதே.
5. உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.
அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு,
“நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம்
என கேட்க..
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.
2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000
தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.
3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை
தவாபு செய்த நன்மை பெறுவீர்.
4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால்
சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை
பெறுவீர்.
5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி
என 10 முறை ஓதினால் உமது எதிரியை
கொன்றதற்கு சமம் என கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் நாமும் ஓதி நன்மை பெறுவோம்.
👉 please share to all
👆👆 இந்த செய்தி பற்றி நான் தேடிப்பார்த்தவரை எந்த நூலிலும் இந்த செய்தி இடபெறவில்லை இந்த செய்தி அரபிக்👇
( لا تنام إلا بعد أن تفعل خمسة أشياء )
قال: رسول الله صلى الله عليه وآله وسلم
يا علي... لا تنم إلا بعد أن تأتي بخمسة أشياء
... ... ... ... ...
1. قراءة القرآن كله
2. التصدق بأربعة آلاف درهم
3. زيارة الكعبه
4. حفظ مكانك في الجنه
5. إرضاء الخصوم
قال : علي كيف ذلك يارسول الله؟؟
فقال له :
1. إذا قرأت سورة الأخلاص ثلاث مرات فقد قرأت القرآن كله .
2. إذا قرأت الفاتحه ثلاث مرات فقد تصدقت بأربعة آلاف درهم .
3. و إذا قلت لاإله إلاالله وحده لاشريك له له الملك وله الحمد يحي ويميت وهو على كل شئ قدير عشر مرات فقد زرت الكعبه .
4. وإذا قلت لاحول ولاقوة إلا بالله العلي العظيم عشر مرات فقد حفظت مكانك في الجنة .
5. وإذا قلت أستغفر الله العظيم الذي لاإله إلاهو الحي القيوم وأتوب إليه عشر مرات فقد أرضيت الخصوم .
ولتعلم بأن إعادة إرسالها لن يكلفك الشئ الكثير بل سيزيد من أجرك وأنها لصدقه جاريه تنفعك
اللهم أغفر وتب وأستر وتقبل ووفق
ஆதாரப்பூர்வமான நபிமொழியை போன்று இந்த செய்தி பரப்பப்படுகின்றது. இன்னும் சிலர் தங்களது வலைதளங்ளிலும் இதை பதிவேற்றம் செய்து வைத்திருக்கின்றனர் ஆனால் இந்த செய்தியை பொறுத்தவரையில் எந்த ஒரு ஆதாரமுமில்லாத ஒரு செய்தியாகும் .
மேலும் இந்த செய்தி ஷிஆக்களால் புனையப்பட்ட ஒரு செய்தியாகத்தான் கருதமுடிகின்றது. நாம் தேடிப்பார்த்த வரையில் எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலிலும் இந்த செய்தி இல்லை .
இதில் வருத்தப்பட வேண்டிய விசயமென்னவெனில் பல குழுமங்ளில் நம் சகோதரர்களே இதை பரப்புவதில் ஆர்வமெடுத்துகொள்கின்றனர் .
நபிகளார் சொன்னதாக இட்டுக்கட்டி கூறுவது பாவங்களில் பெரும் பாவம் என்பதை மனதில் நிறுத்தி ஆதாரமற்ற எந்த ஒரு செய்தியையும் தவிர்த்துகொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (5734)
முஹம்மத்