Thursday, 15 February 2018

#பலவீனமான_ஹதீஸ்

ஹஜ்ரத் உம்மு ஹானீ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை கடந்துசென்ற பொழுது, “யா ரஸூலுல்லாஹ்! நான் வயது முதிர்ந்து பலவீனமானவளாகிவிட்டேன். நான் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும்படியான ஏதேனும் ஓரு செயலை எனக்குச் சொல்லித்தாருங்கள்” என்று கேட்டேன்.

“ஸுப்ஹானல்லாஹ்” என்று நூறு தடவை சொல்லுங்கள், ஹஜ்ரத் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் நூறு அடிமைகளை உரிமைவிட்டதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும்.

“அல்ஹம்துலில்லாஹ்” என நூறு முறை கூறுங்கள், கடிவாளமிட்ட சேனையுடன் நூறு குதிரைகளை அல்லாஹு தஆலாவின் பாதையில் சவாரி செய்யக் கொடுத்ததற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும்.

“அல்லாஹு அக்பர்” என்று நூறு முறை சொல்லுங்கள், தன் கழுத்தில் குர்பானியின் பட்டி அணிவிக்கப்பட்ட நூறு ஒட்டகங்களை அறுப்பதற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும்.

“லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று நூறு முறை சொல்லுங்கள். அதன் நன்மை வானம் பூமிக்கிடையில் உள்ள பகுதியை நன்மைகளால் நிரப்பிவிடும், என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இப்னுமாஜா & அஹ்மத் நூலில் வருகிறநு வெவ்வேறு அறிவிப்பாளர் வரிசையில்.

அஹ்மத்👇 ஹதீஸ் அரபி

27723 قال عبد الله وجدت في كتاب أبي حدثنا سعيد بن سليمان قال حدثنا موسى بن خلف قال حدثنا عاصم بن بهدلة عن أبي صالح عن أم هانئ بنت أبي طالب قال قالت مر بي ذات يوم رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله إني قد كبرت وضعفت أو كما قالت فمرني بعمل أعمله وأنا جالسة قال سبحي الله مائة تسبيحة فإنها تعدل لك مائة رقبة تعتقينها من ولد إسماعيل واحمدي الله مائة تحميدة تعدل لك مائة فرس مسرجة ملجمة تحملين عليها في سبيل الله وكبري الله مائة تكبيرة فإنها تعدل لك مائة بدنة مقلدة متقبلة وهللي الله مائة تهليلة قال ابن خلف أحسبه قال تملأ ما بين السماء والأرض ولا يرفع يومئذ لأحد عمل إلا أن يأتي بمثل ما أتيت به

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் அபூ ஸாலிஹ் இவர் உம்மு ஹானீ பின் அபீதாலிப் ரலி அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களுடைய முன்னாள் அடிமையாவார் அவர் பெயர் பாதான் என்பதாகும் பாதாம் என்றும் சொல்லப்படுகிறது

அபூ ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர்👇

قال يحيى بن معين : ليس به بأس ، وإذا حدث عنه الكلبي فليس بشيء .

وقال يحيى القطان : لم أر أحدا من أصحابنا تركه . 

وقال ابن عدي : عامة ما يرويه تفسير ، قل ما له من المسند . 

وقال النسائي : ليس بثقة ، كذا عندي ، وصوابه بقوي ، فكأنها [ ص: 38 ] تصحفت ، فإن النسائي لا يقول : ليس بثقة في رجل مخرج في كتابه ، وهذا الرجل من طبقة السمان ، لكنه عاش بعده نحوا من عشرين سنة .

இது பலவீனமான அறிவிப்பாகும். இதில் அபூ சாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர், இமாம் அபூ ஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

இப்னுமாஜா அறிவிப்பு👇அரபி

3810 حدثنا إبراهيم بن المنذر الحزامي حدثنا أبو يحيى زكريا بن منظور حدثني محمد بن عقبة بن أبي مالك عن أم هانئ قالت أتيت إلى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله دلني على عمل فإني قد كبرت وضعفت وبدنت فقال كبري الله مائة مرة واحمدي الله مائة مرة وسبحي الله مائة مرة خير من مائة فرس ملجم مسرج في سبيل الله وخير من مائة بدنة وخير من مائة رقبة

இந்த ஹதீஸில் ஸக்கரியா பின் மன்ஸுர் என்பவர் பலவீனமானவர் 👇

يحيى بن معِين قَالَ زَكَرِيَّا بن مَنْظُور لَيْسَ بِشَيْء

இந்த செய்தியில் ஸக்கரியா பின் மன்ஸுர் என்பவர் இடம்பெருகிறார்கள் இவர் பலவீனமானவர் என இமாம் இப்னு மயீன் கூறுகிறார்.

நூல்: அல்காமில் ஃபில்லுஅஃபா 4/168

முஹம்மத்

No comments:

Post a Comment