Thursday, 15 February 2018

இதுவும்_ஒரு_பலவீனமான_ஹதீஸே

இணையத்தில்ப ரவி வரும்ப லவீனமான ஹதீஸ்


பாத்திமா ரலி அறிவிக்கின்றார்;
          அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்து கொண்டிருந்தேன்.  அந்நேரம் நபி ஸல் என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பி விட்டு இவ்வாறு கூறினார்கள் :  அருமை மகளே   !  எழு   !  அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக  இரு.  அலட்சயப்படுத்துபவராக  மாறி விடாதே.  அதிகாலை நேரத்திற்கும் சூரிய  உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க்  எனும் ) வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்.  (#பைஹகீ)

இந்த ஹதீஸ் அரபி 👇

عَبْدُ الْخَالِقِ بْنُ عَلِيِّ بْنِ عَبْدِ الْخَالِقِ النَّيْسَابُورِيُّ ، أنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَبِيبٍ ، نا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ يَزِيدَ بْنِ أَبِي الْعَوَّامِ الرِّيَاحِيُّ ، نا أَبِي ، نا الْمُشْمَعِلُّ بْنُ مِلْحَانَ الْقَيْسِيُّ ، نا عَبْدُ الْمَلِكِ بْنُ هَارُونَ بْنِ عَنْتَرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنْ فَاطِمَةَ بِنْتِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَتْ : مَرَّ بِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعَةٌ مُتَصبِّحَةٌ ، فَحَرَّكَنِي بِرِجْلِهِ ، ثُمَّ قَالَ : يَا بُنَيَّةُ " قَوْمِي اشْهَدِي رِزْقَ رَبِّكِ ، وَلا تَكُونِي مِنَ الْغَافِلِينَ ، فَإِنَّ اللَّهَ يَقْسِمُ أَرْزَاقَ النَّاسِ مَا بَيْنَ طُلُوعِ الْفَجْرِ إِلَى طُلُوعِ الشَّمْسِ " . إِسْنَادُهُ ضَعِيفٌ . وَأَخْبَرَنَا أَبُو نَصرِ بْنُ قَتَادَةَ ، أنا أَبُو الْعَبَّاسِ الضُّبَعِيُّ ، نا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ بْنِ الْحَجَّاجِ ، نا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ غَالِبٍ ، نا إِسْمَاعِيلُ بْنُ مُبَشِّرِ بْنِ عَبْدِ اللَّهِ الْجَوْهَرِيُّ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ هَارُونَ بْنِ عَنْتَرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَاطِمَةَ بَعْدَ أَنْ صَلَّى الصبْحَ وَهِيَ نَائِمَةٌ فَذَكَرَ مَعْنَاهُ .

இந்த ஹதீஸ் பைஹகீ நூலில் =4399 இடம்பெருகிறது

இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் அவர்களே இந்த ஹதீஸின் அடிக்குறிப்பில் பலவீனமானது என்று கூறிப்பிடுகிறார்கள் .

இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர்👇

هارون بن عنترة بن عبد الرحمان الشيباني ، أبو عبد الرحمان ، ابن أبي وكيع ، الكُوفِيّ.
(*) قال البَرْقانِيّ سألت الدَّارَقُطْنِيّ عن عبد الملك بن هارون بن عنترة ، فقال متروك يكذب ، وأبوه يحتج به. (252).
(*) وقال الدَّارَقُطْنِيّ عبد الملك بن هارون بن عنترة ، الكُوفِيّ ، عن أبيه ، وأبوه أيضًا متروك ، روى عن حبيب بن أبي ثابت ، وأبي إسحاق. ((الضعفاء والمتروكون)) (362

அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும் இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

முஹம்மத்

No comments:

Post a Comment