Tuesday, 3 April 2018

أَخْبَرَنَاهُ أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الْفَقِيهُبِبَغْدَادَ ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَعَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالا : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ ثَوْبَانَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاثٍ الْكِبْرُ وَالْغُلُولُ وَالدَّيْنُ دَخَلَ الْجَنَّةَ
ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ ﻋﻠﻰ ﺍﻟﺼﺤﻴﺤﻴﻦ ﻟﻠﺤﺎﻛﻢ 2156

“பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்றை விட்டும் விலகியிருந்த நிலையில் எவர் மரணமடைவாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: ஹாகிம் / அல்-முஸ்தத்ரக் அலா அல்-ஸஹீஹைன் 2156

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.

இதுபோன்ற முதல்லிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ”ஸமிஃத்து” (நான் செவியேற்றேன்), ”ஹத்தஸனா” ”அஹ்பரனா” (எங்க்களுக்கு அறிவித்தார்) போன்ற சந்தேகமே இல்லாமல் நேரடியாகச் செவியுற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதனை ஆதாரமாக்க் கொள்ள முடியும். மாறாக ”கால” (சொன்னார்), அல்லது ”அன்” (இன்னார் வழியாக) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

تهذيب التهذيب ـ محقق (8 / 317) :وقال أبو داود الطيالسي عن شعبة كان قتادة إذا جاء ما سمع قال حدثنا وإذا جاء ما لم يسمع قال قال فلان

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை அறிவித்தால் ”ஹத்தஸனா” (இன்னார் எங்களுக்கு அறிவித்தார்) என்று கூறுவார். தான் நேரடியாகக் கேட்காததை அறிவித்தால் ”கால ஃபுலான்” (இன்னார் சொன்னார்) என்று கூறுவார் என ”ஷுஃபா” அவர்களிடமிருந்து அபூதாவூத் தயாலிஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 317

تهذيب التهذيب ـ محقق (8 / 318) :
وقال أبو حاتم اثبت اصحاب انس الزهري ثم قتادة قال وهو أحب إلي من أيوب ويزيد الرشك إذا ذكر الخبر يعني إذا صرح بالسماع

அனஸ் அவர்களின் மாணவர்களில் மிகவும் நம்பகமானவர்கள் ஷுஹ்ரி என்பாரும் பிறகு கதாதா அவர்களும் ஆவார்கள்.  கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி செய்தியை அறிவித்தால் அய்யூப் மற்றும் யஸீத் ஆகியோரை விட எனக்கு நேசத்திற்குரியவர் ஆவார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.
 நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 318

سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] (9 / 325) :وَهُوَ حُجّةٌ بِالإِجْمَاعِ إِذَا بَيَّنَ السَّمَاعَ، فَإِنَّهُ مُدَلِّسٌ مَعْرُوْفٌ بِذَلِكَ، وَكَانَ يَرَى القَدَرَ - نَسْأَلُ اللهَ العَفْوَ

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி அறிவித்தால் ஏகோபித்த அடிப்படையில் அவர் ஆதாரத்திற்குரியவர் ஆவார். அவர் அறியப்பட்ட முதல்லிஸ் ஆவார். இன்னும் விதியை மறுக்கும் கொள்கையைச் கொண்டிருந்தார். அல்லாஹ்விடம் அவருக்கு மன்னிப்பைக் கோருவோம் என இமாம் தஹபி கூறுகிறார்.
நூல்:ஷியரு அஃலாமு அன் நுபலாவு பாகம்:9 பக்கம் : 325

இது வரை நாம் பார்த்த விமர்சனங்களிலிருந்து கதாதா அவர்கள் முதல்லிஸ் என்பது தெளிவாகிவிட்டது. அவர் நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.

No comments:

Post a Comment