#மக்கா_மதீனாவில்
#தராவீஹ்_20_ரக்ஆத்கள்
#நடப்பது_ஏன்.?
தராவிஹ் தொழுகை 20 ரக்ஆத்கள் தான் என்று ஆதரிப்பவர்கள் அனைவரும் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கிய ஆதாரம்.
மக்கா மதீனாவிலே தராவீஹ் தொழுகை 20 ரக்ஆத்கள் நடக்கிறதே.!!
இதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் அவர்களாலும் கொடுக்க முடியாது ஏனெனில் என்னுடைய முதல் (தராவீஹ் 20 ரக்ஆத்கள்.?) என்ற பதிவில் இதனுடைய ஹதீஸ் ஆதாரங்கள் குறித்து விளக்கம் அளித்திருப்பேன்.
https://m.facebook.com/story.php?story_fbid=930223820475047&id=100004623131415
படிக்காதவர்கள் மேலே உள்ள லிங்கில் சென்று படித்துவிட்டு இதனை படியுங்கள்.
மக்காவில் தராவீஹ் 20 ரக்ஆத்கள் நடப்பதற்கு
#வரலாற்று_ரீதியான
#ஆதாரங்கள் தான் முன்வைக்கப்படுகிறது.
அதாவது மக்கா புனித காஃபதுல்லாஹ் (ஹரம்) உள்ள இடம் என்பது சர்வதேச உலக முஸ்லிம்களுக்கு சொந்தமான இடம் அதனை அங்கு ஆளும் ஆட்சியாளர்கள் தமது நாட்டிற்கு உரியது என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது.
இப்போது இருக்கும் சவூதி அரேபியா தன்னுடைய ஆளுமைக்கு கீழ் மக்கா மதீனாவை நகரை வைத்துள்ளது.
இதற்கு முன் துருக்கியர்கள் தான் மக்கா மற்றும் மதீனா இருக்கும் (சவூதி அரேபியாவின் குறிப்பிட்ட) பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் அதாவது #துருக்கி தான் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கு தலைமையாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அதன் காரணமாக தான் முஸ்லிம் மக்களை பிற மக்கள் துருக்கன் என்று கூறுவார்கள் காலப்போக்கில் அது #துலுக்கன் ஆனது.
மேலும் #தொப்பி அணிவது துருக்கியர்களின் உடை கலாச்சாரங்களில் ஒன்று அன்றைக்கு துருக்கியர்கள் உலக முஸ்லிம்களுக்கு தலைமையாக இருந்ததால் தான் தொப்பி உலக அளவில் #இஸ்லாமிய_சின்னம் ஆனது.
இதுமட்டுமின்றி அன்றைய துருக்கி ஆட்சியில் இருந்த தற்போதைய சவூதி அரேபியாவில் பல #அனாச்சாரங்கள் #பித்அத்கள்_தர்கா_வழிபாடு என அனைத்தும் பெருகி இருந்தது.
இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின.
பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.
எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நட்த்துவார்கள். இதைப் பார்த்தால் உலகமே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது.
அதில் ஒன்று தான் மதீனாவில் தரைக்கு மேல் உயர்ந்த கபுரை தரைமட்டம் ஆக்குங்கள் என்று சொன்ன அல்லாஹ்வின் தூதருக்கே (ஸல்) பச்சை வடிவிலான மிகப்பெரிய ஜன்டா கட்டுப்பட்டது.
அதில் ஒன்று தான்
#மக்கா_மதீனாவில் #ரமழான் மாதத்தில் #தராவீஹ்_20 #ரக்ஆத்கள் நடத்தப்பட்டு வந்தது.
ஹஜ் உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது.
கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் #சவூதி அரேபியா என்று அரசாங்கம் பெயர் சூட்டப்பட்டது.
இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார்.
துருக்கி ஷைத்தான்கள் விரட்டி அடிக்கப்பட்ட உடன் எல்லா தர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்கார்ர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.
லாயிலாஹ இல்ல்ல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்ட்து.
நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்ப்ப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது.
ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் மட்டும் இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன
தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் #வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும்.
அதன் பிறகு துருக்கியர்களிடம் இருந்த சவுதி அரேபியா முஹம்மது பின் அப்துல் வஹாப் இன் முயற்சியில் சவூதி அரேபியா துருக்கியர்களிடம் வெற்றி கொள்ளப்படுகிறது.
இப்னு #சவூத் என்ற மன்னர் ஆட்சி அமைக்கிறார் அதனால் தான் #சவூதி அரேபியா என்ற #பெயர் அந்த நாட்டிற்கு வந்தது அவர் ஆட்சி அமைத்த உடன் துருக்கி ஆட்சியில் என்னென்ன அனாச்சாரங்கள் பித்அத்கள் தர்கா வழிபாடு நடந்ததோ அத்தனையும் ஒழித்து அழிக்கிறார் மன்னர் இப்னு சவூத்.
சில #அறிஞர்களின்_கருத்துப்படி
துருக்கியர்கள் தங்களுடைய ஆளுமை பகுதியான சவூதி அரேபியாவை அந்த மன்னரிடம் ஒப்படைக்கும் முன்பு ஒரு #ஒப்பந்தம் போடப்படுகிறது.
அதாவது மக்கா மற்றும் மதீனாவில் எதையெல்லாம் நீங்கள் மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அதை நீக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மதீனாவில் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறைக்கு மேல் உள்ள மிகப்பெரிய ஜன்டா அதனை இடிக்கக் கூடாது.
மற்றும் #மக்கா_மதீனாவில்
#தராவீஹ்
#20_ரக்ஆத்கள்_நடப்பதை #மாற்றம்_செய்யக்_கூடாது இதற்கு ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தமது ஆட்சி பகுதியை போரின்றி உங்களிடம் ஒப்படைக்கிறோம்.
இல்லையெனில் போர் தொடுப்போம் என்றனர் மக்கா மற்றும் மதீனா புனித பூமி அங்கு இரத்தம் சிந்தக் கூடாது என்ற நோக்கில் அவர்கள் அளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் மன்னர் இப்னு சவூத்.
என்று சில வரலாற்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்
அதன் பிறகு தான் ஆட்சி மாறியது இந்த காரணம் மட்டும் இல்லாமல் மக்கா சர்வதேச உலகின் எல்லா நாடுகளிலும் இருந்து முஸ்லிம்கள் இலட்சக்கணக்கானோர் வந்து செல்வதால் மக்கள் குழம்பி விடக் கூடாது என்ற நோக்கிலும் ஒப்பந்தத்தை முறித்துக் விடக்கூடாது என்ற நோக்கிலும் அதனை அவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.
அதுவும் மக்கா மதீனாவில் தராவீஹ் தொழுத நபர்களிடம் கேட்டு பாருங்கள் முதல் பத்து ரக்ஆத் ஒரு இமாம் தொழுகை நடத்துவார்
பிறகு அவர் சென்று விடுவார் பின்னர் வேறு ஒரு இமாம் வந்து அடுத்த பத்து ரக்ஆத் தொழுகை நடத்துவார். இவர்கள் இப்படி செய்வதால் இது சரி என்று ஆகிவிடாது
சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள் அங்கு #மக்கா #மதீனாவை_தவிர
#மற்ற_அனைத்து
#பள்ளிவாசல்களிலும்
#ரமழான்
#மாதத்தில்_8_ரக்ஆத்_தான்
#தொழுகை_நடத்துவார்கள்.
#20_ரக்ஆத்கள் தான் #சரி_என்றால் சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் #மக்காவை
#தவிர_ஏனைய
#ஆயிரக்கணக்கான
#பள்ளிவாசல்களில்
#ஏன்_8_ரக்ஆத்கள்
#நடத்தப்படுகிறது_என்பதை
#சிந்தித்தாலே_உங்களுக்கு
#விளக்கம்_புரியும்.
மேலும் இன்றளவும் கஅபாவில் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை அங்குள்ள சில உலமாக்கள் எதிர்த்துக் கொண்டும் உள்ளனர்.
மேலும் சவூதியில் உள்ள பல உலமாக்கள் இரவுத் தொழுகையை நாம் கூறி வரும் அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகின்றனர்.
எனவே கஅபாவில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்கள் நடத்தி வருவதற்கு நபி வழியில் எந்தச் சான்றும் இல்லை. இவ்வாறு அங்கு நடைபெற்று வருவதற்கு ஆட்சியாளர்களும், அதைக் கண்டிக்காத அங்குள்ள உலமாக்களும் தான் பொறுப்பாவார்கள்.
#அல்லாஹ்வே_அறிந்தவன்
#ஆக்கம்
Muhammed Azarudeen
இதில் நிறை இருந்தால் அது முழுவதும் அல்லாஹ்வை சாரும். (அல்ஹம்துலில்லாஹ்)
குறை இருந்தால் என்னை மட்டுமே சாரும். (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக)

No comments:
Post a Comment