Tuesday, 8 May 2018

#நோன்பை_பற்றி_பலவீனமான_ஹதீஸ்

أَخْبَرَنَا اللَّهِ ، ثنا الْقَاضِي أَبُو مُحَمَّدٍ يُوسُفُ بْنُ يَعْقُوبَ ، ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَطَاءٍ ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ جَهَّزَ حَاجًّا ، أَوْ جَهَّزَ غَازِيًا ، أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ ، أَوْ فَطَّرَ صَائِمًا ، فَلَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ "

எவர் ஹஜ்ஜுக்குச் செல்பவரின், அல்லது அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுபவரின் பயணத்துக்குரிய ஏற்பாடு செய்வாரோ, அல்லது அவர் சென்ற பிறகு அவருடைய வீட்டாரின் காரியங்களில் உதவி ஒத்தாசையாக இருப்பாரோ அல்லது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி செய்வாரோ, அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவருக்கு, அல்லது ஹஜ்ஜுக்குப் புறப்பட்டவருக்கு அல்லது நோன்பு வைத்தவருக்கு சமமான கூலி அவருக்கும் கிடைக்கும். மேலும், அவர்களுடைய நன்மையில் எந்தக் குறைவும் உண்டாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஷுஃபுல் ஈமான் பைஹகீ: 3/470

علل المديني ج: 1 ص: 66
88 قال علي عطاء بن أبي رباح لقي عبدالله بن عمر وراى أبا سعيد الخدري رآه يطوف بالبيت ولم يسمع منه وجابرا وابن عباس ورأى عبدالله بن عمرو ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانيء وسمع من عبدالله بن الزبير وابن عمر ولم يسمع من أم كرز شيئا وروى عن أم حبيبة بنت ميسرة عن أم كرز وسمع من عائشة وجابر بن عبدالله حبيب بن ثابت
المراسيل لابن أبي حاتم ج: 1 ص: 155
567 حدثنا محمد بن أحمد بن البراء قال قال علي يعني ابن المديني عطاء بن أبي رباح رأى أبا سعيد الخدري يطوف بالبيت ولم يسمع منه ورأى عبدالله بن عمرو ولم يسمع منه ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانىء ولا من أم كرز شيئا
நூல் : இலலுல் மதீனீ பாகம் : 1 பக்கம் : 66
நூல் : அல்மராசீலு ­இப்னி அபீ ஹாத்தம் பாகம் : 1 பக்கம் : 155

இந்த ஹதீஸை
ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்களிடம் இருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார் இவர் ஸைது பின் காலிதில் ஜுஹனிய்யீ ரலி அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

மேலும்

 இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன்  அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூல்: இஸாபா:4/180,181

நூல்: மீஸானுல் இஃதிதால் :4/ 393,403,407.

இப்னு ஹிப்பான் ஸிகாத்: 7/609

இப்னு செய்யத்

No comments:

Post a Comment