Sunday, 13 May 2018

#மக்கா_மதீனாவில்
#தராவீஹ்_20_ரக்ஆத்கள்
#நடப்பது_ஏன்.?

தராவிஹ் தொழுகை 20 ரக்ஆத்கள் தான் என்று ஆதரிப்பவர்கள் அனைவரும் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கிய ஆதாரம்.

மக்கா மதீனாவிலே தராவீஹ் தொழுகை 20 ரக்ஆத்கள் நடக்கிறதே.!!

இதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் அவர்களாலும் கொடுக்க முடியாது ஏனெனில் என்னுடைய முதல் (தராவீஹ் 20 ரக்ஆத்கள்.?) என்ற பதிவில் இதனுடைய ஹதீஸ் ஆதாரங்கள் குறித்து விளக்கம் அளித்திருப்பேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=930223820475047&id=100004623131415

படிக்காதவர்கள் மேலே உள்ள லிங்கில் சென்று படித்துவிட்டு இதனை படியுங்கள்.

மக்காவில் தராவீஹ் 20 ரக்ஆத்கள் நடப்பதற்கு
#வரலாற்று_ரீதியான
#ஆதாரங்கள் தான் முன்வைக்கப்படுகிறது.

அதாவது மக்கா புனித காஃபதுல்லாஹ் (ஹரம்) உள்ள இடம் என்பது சர்வதேச உலக முஸ்லிம்களுக்கு சொந்தமான இடம் அதனை அங்கு ஆளும் ஆட்சியாளர்கள் தமது நாட்டிற்கு உரியது என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது.

இப்போது இருக்கும் சவூதி அரேபியா தன்னுடைய ஆளுமைக்கு கீழ் மக்கா மதீனாவை நகரை வைத்துள்ளது.

இதற்கு முன் துருக்கியர்கள் தான் மக்கா மற்றும் மதீனா இருக்கும் (சவூதி அரேபியாவின் குறிப்பிட்ட) பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் அதாவது #துருக்கி‌ தான் ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்கு தலைமையாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

அதன் காரணமாக தான் முஸ்லிம் மக்களை பிற மக்கள் துருக்கன் என்று கூறுவார்கள் காலப்போக்கில் அது #துலுக்கன் ஆனது.

மேலும் #தொப்பி அணிவது துருக்கியர்களின் உடை கலாச்சாரங்களில் ஒன்று அன்றைக்கு துருக்கியர்கள் உலக முஸ்லிம்களுக்கு தலைமையாக இருந்ததால் தான் தொப்பி உலக அளவில் #இஸ்லாமிய_சின்னம் ஆனது.

இதுமட்டுமின்றி அன்றைய துருக்கி ஆட்சியில் இருந்த தற்போதைய சவூதி அரேபியாவில் பல #அனாச்சாரங்கள் #பித்அத்கள்_தர்கா_வழிபாடு என அனைத்தும் பெருகி இருந்தது.

இவர்கள் ஆட்சியில் இருந்த போது இப்போது நாகூரிலும் அஜ்மீரிலும் நடப்பதை மிஞ்சும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணைவத்தலும் கணக்கிலடங்காத பித்அத்களும் அறங்கேறின.

பத்ருப்போர் நடந்த இடத்திலும் உஹதுப் போர் நடந்த இடத்திலும் நூற்றுக்கணக்கான தர்காக்கள் கட்டப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஒட்டி அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வாகவே ஆக்கப்பட்டார்கள். அவர்களின் அடக்கத்தலம் அலங்காரம் செய்யப்பட்டது. அதன் சுவரிலும் டூம்களிலும் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் கவிதைகள் பதியப்பட்டன.

எந்த அளவுக்கு மார்க்கத்தை நாசப்படுத்தி இருந்தார்கள் என்றால் கஅபாவைச் சுற்றி நான்கு முஸல்லாக்கள் உருவாக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி என நான்கு பிரிவினரும் தனித்தனியாக தொழுகை நட்த்துவார்கள். இதைப் பார்த்தால் உலகமே காரித்துப்பும் அளவுக்கு இருந்தது.

அதில் ஒன்று தான் மதீனாவில் தரைக்கு மேல் உயர்ந்த கபுரை தரைமட்டம் ஆக்குங்கள் என்று சொன்ன அல்லாஹ்வின் தூதருக்கே (ஸல்) பச்சை வடிவிலான மிகப்பெரிய ஜன்டா கட்டுப்பட்டது.

அதில் ஒன்று ‌தான்
#மக்கா_மதீனாவில் #ரமழான் மாதத்தில் #தராவீஹ்_20 #ரக்ஆத்கள் நடத்தப்பட்டு வந்தது.

ஹஜ் உம்ராவுக்கு வரும் பயணிகளிடம் கொடிய வரி விதிக்கப்பட்டது.

கப்ரு வணக்கத்தை இஸ்லாத்தில் நுழைத்த இந்தக் கேடுகெட்டவர்களை எதிர்த்து இப்ன் சவூது படைதிரட்டி போரிட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இவர் பெயரைக் குறிக்கும் வகையில் தான் #சவூதி அரேபியா என்று அரசாங்கம் பெயர் சூட்டப்பட்டது.

இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருந்தவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்ற மார்க்க அறிஞர். இவர் ஒரு பக்கம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதை எதிர்த்து பிரச்சாரம் செய்து துடிப்புள்ள இளைஞர்களை உருவாக்கி இருந்தார். அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் அநியாயத்தை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில் துருக்கியர்களிடமிருந்து நாட்டை மீட்கும் படையுடன் இணைந்து செயலாற்றினார்.

துருக்கி ஷைத்தான்கள் விரட்டி அடிக்கப்பட்ட உடன் எல்லா தர்காக்களும் உடைத்து எறியப்பட்டன. தாயத்து தட்டு மோசடிக்கார்ர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.

லாயிலாஹ இல்ல்ல்லாஹ் என்பதைக் கொடியில் பதித்து இனி எல்லாம் தவ்ஹீத் தான் என்று பிரகடனம் செய்யப்பட்ட்து.

நான்கு முஸல்லாக்களும் உடைத்து நொறுக்கப்ப்ப்பட்டு ஒரே முஸல்லாவாக ஆக்கப்பட்டது.

ஹஜ் உம்ராவுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்து செய்யப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தில் மட்டும் இன்னும் சில அனாச்சாரங்கள் மிச்சம் உள்ளன

தர்காக்களை உடைத்து எறிந்ததாலும் புரோகிதர்களை ஒழித்துக் கட்டியதாலும் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் போதனை செய்ததாலும் இந்தக் கொள்கையைச் சொன்னவர்கள் #வஹ்ஹாபிகள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

வஹ்ஹாப் என்பது அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களில் ஒன்றாகும்.
அதன் பிறகு துருக்கியர்களிடம் இருந்த சவுதி அரேபியா முஹம்மது பின் அப்துல் வஹாப் இன் முயற்சியில் சவூதி அரேபியா துருக்கியர்களிடம் வெற்றி கொள்ளப்படுகிறது.

இப்னு #சவூத் என்ற மன்னர் ஆட்சி அமைக்கிறார் அதனால் தான் #சவூதி அரேபியா என்ற #பெயர் அந்த நாட்டிற்கு வந்தது அவர் ‌ஆட்சி அமைத்த உடன் துருக்கி ஆட்சியில் என்னென்ன  அனாச்சாரங்கள் பித்அத்கள் தர்கா வழிபாடு நடந்ததோ அத்தனையும் ஒழித்து அழிக்கிறார் மன்னர் இப்னு சவூத்.

சில #அறிஞர்களின்_கருத்துப்படி

துருக்கியர்கள்‌ தங்களுடைய ஆளுமை பகுதியான சவூதி அரேபியாவை அந்த மன்னரிடம் ஒப்படைக்கும் முன்பு ஒரு #ஒப்பந்தம் போடப்படுகிறது.

அதாவது மக்கா மற்றும் மதீனாவில் எதையெல்லாம் நீங்கள் மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அதை நீக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மதீனாவில் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறைக்கு மேல் உள்ள மிகப்பெரிய ஜன்டா அதனை இடிக்கக் கூடாது.

மற்றும் #மக்கா_மதீனாவில்
#தராவீஹ்
#20_ரக்ஆத்கள்_நடப்பதை #மாற்றம்_செய்யக்_கூடாது இதற்கு ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் தமது ஆட்சி பகுதியை போரின்றி உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

இல்லையெனில் போர் தொடுப்போம் என்றனர் மக்கா மற்றும் மதீனா புனித பூமி அங்கு இரத்தம் சிந்தக் கூடாது என்ற நோக்கில் அவர்கள் ‌அளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் மன்னர் இப்னு சவூத்.

என்று சில வரலாற்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்

அதன் பிறகு தான் ஆட்சி மாறியது இந்த காரணம் மட்டும் இல்லாமல் மக்கா சர்வதேச உலகின் எல்லா நாடுகளிலும் இருந்து முஸ்லிம்கள் இலட்சக்கணக்கானோர் வந்து செல்வதால்  மக்கள் குழம்பி விடக் கூடாது என்ற‌ நோக்கிலும் ஒப்பந்தத்தை முறித்துக் விடக்கூடாது என்ற நோக்கிலும் அதனை அவர்கள் இன்று வரை தொடர்கின்றனர்.

அதுவும் மக்கா மதீனாவில் தராவீஹ் தொழுத நபர்களிடம் கேட்டு பாருங்கள் முதல் பத்து ரக்ஆத் ஒரு இமாம் தொழுகை நடத்துவார்
பிறகு அவர் சென்று விடுவார் பின்னர் வேறு ஒரு இமாம் வந்து அடுத்த பத்து ரக்ஆத் தொழுகை நடத்துவார். இவர்கள் இப்படி செய்வதால் இது சரி என்று ஆகிவிடாது

சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள் அங்கு #மக்கா #மதீனாவை_தவிர
#மற்ற_அனைத்து
#பள்ளிவாசல்களிலும்
#ரமழான்
#மாதத்தில்_8_ரக்ஆத்_தான்
#தொழுகை_நடத்துவார்கள்.

#20_ரக்ஆத்கள் தான் #சரி_என்றால் ‌சவூதி அரேபியா நாட்டில் இருக்கும் #மக்காவை
#தவிர_ஏனைய
#ஆயிரக்கணக்கான
#பள்ளிவாசல்களில்
#ஏன்_8_ரக்ஆத்கள்
#நடத்தப்படுகிறது_என்பதை
#சிந்தித்தாலே_உங்களுக்கு
#விளக்கம்_புரியும்.

மேலும் இன்றளவும் கஅபாவில் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை அங்குள்ள சில உலமாக்கள் எதிர்த்துக் கொண்டும் உள்ளனர்.

மேலும் சவூதியில் உள்ள பல உலமாக்கள் இரவுத் தொழுகையை நாம் கூறி வரும் அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகின்றனர்.

எனவே கஅபாவில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்கள் நடத்தி வருவதற்கு நபி வழியில் எந்தச் சான்றும் இல்லை. இவ்வாறு அங்கு நடைபெற்று வருவதற்கு ஆட்சியாளர்களும், அதைக் கண்டிக்காத அங்குள்ள உலமாக்களும் தான் பொறுப்பாவார்கள்.

#அல்லாஹ்வே_அறிந்தவன்

#ஆக்கம்

Muhammed Azarudeen

இதில் நிறை இருந்தால் அது முழுவதும் அல்லாஹ்வை சாரும். (அல்ஹம்துலில்லாஹ்)

குறை இருந்தால் என்னை மட்டுமே சாரும். (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக)

Tuesday, 8 May 2018

#நோன்பை_பற்றி_பலவீனமான_ஹதீஸ்

أَخْبَرَنَا اللَّهِ ، ثنا الْقَاضِي أَبُو مُحَمَّدٍ يُوسُفُ بْنُ يَعْقُوبَ ، ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ ، ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَطَاءٍ ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ جَهَّزَ حَاجًّا ، أَوْ جَهَّزَ غَازِيًا ، أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ ، أَوْ فَطَّرَ صَائِمًا ، فَلَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ "

எவர் ஹஜ்ஜுக்குச் செல்பவரின், அல்லது அல்லாஹுதஆலாவின் பாதையில் புறப்படுபவரின் பயணத்துக்குரிய ஏற்பாடு செய்வாரோ, அல்லது அவர் சென்ற பிறகு அவருடைய வீட்டாரின் காரியங்களில் உதவி ஒத்தாசையாக இருப்பாரோ அல்லது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி செய்வாரோ, அல்லாஹுதஆலாவின் பாதையில் சென்றவருக்கு, அல்லது ஹஜ்ஜுக்குப் புறப்பட்டவருக்கு அல்லது நோன்பு வைத்தவருக்கு சமமான கூலி அவருக்கும் கிடைக்கும். மேலும், அவர்களுடைய நன்மையில் எந்தக் குறைவும் உண்டாகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஷுஃபுல் ஈமான் பைஹகீ: 3/470

علل المديني ج: 1 ص: 66
88 قال علي عطاء بن أبي رباح لقي عبدالله بن عمر وراى أبا سعيد الخدري رآه يطوف بالبيت ولم يسمع منه وجابرا وابن عباس ورأى عبدالله بن عمرو ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانيء وسمع من عبدالله بن الزبير وابن عمر ولم يسمع من أم كرز شيئا وروى عن أم حبيبة بنت ميسرة عن أم كرز وسمع من عائشة وجابر بن عبدالله حبيب بن ثابت
المراسيل لابن أبي حاتم ج: 1 ص: 155
567 حدثنا محمد بن أحمد بن البراء قال قال علي يعني ابن المديني عطاء بن أبي رباح رأى أبا سعيد الخدري يطوف بالبيت ولم يسمع منه ورأى عبدالله بن عمرو ولم يسمع منه ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانىء ولا من أم كرز شيئا
நூல் : இலலுல் மதீனீ பாகம் : 1 பக்கம் : 66
நூல் : அல்மராசீலு ­இப்னி அபீ ஹாத்தம் பாகம் : 1 பக்கம் : 155

இந்த ஹதீஸை
ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்களிடம் இருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார் இவர் ஸைது பின் காலிதில் ஜுஹனிய்யீ ரலி அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

மேலும்

 இதில் முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றிருக்கின்றார் இவர் கடுமையான மனனக் குறையுள்ளவரும் இவர்பற்றி அஹ்மத் இப்ன் ஹன்பல் மற்றும் யஹ்யா இப்னு மஈன்  அவர்களும் இவரை பலவீனர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

நூல்: இஸாபா:4/180,181

நூல்: மீஸானுல் இஃதிதால் :4/ 393,403,407.

இப்னு ஹிப்பான் ஸிகாத்: 7/609

இப்னு செய்யத்
#பலவீனமான_ஹதீஸ் #நோன்பை #பற்றி

حدثنا هناد حدثنا عبد الرحيم عن عبد الملك بن أبي سليمان عن عطاء عن زيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا قال أبو عيسى هذا حديث حسن صحيح

 'எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நஸாயீ கபீர் ( 2 / 256 )
திர்மிதீ: 807
இப்னுமாஜா : 1746
தாரமி: 1702
அஹ்மத்: 21168
முஸ்னத் ஹுமைதி: 276
பஸ்ஸார்: 3775
இப்னு ஹிப்பான்: 895
தப்ரானீ கபீர்: 5/256,257
பைகஹீ ஷுபுல் ஈமான்: 3952

ஆகிய நூல்களின் இந்த ஹதீஸ் இடம் பெருகிறது

علل المديني ج: 1 ص: 66
88 قال علي عطاء بن أبي رباح لقي عبدالله بن عمر وراى أبا سعيد الخدري رآه يطوف بالبيت ولم يسمع منه وجابرا وابن عباس ورأى عبدالله بن عمرو ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانيء وسمع من عبدالله بن الزبير وابن عمر ولم يسمع من أم كرز شيئا وروى عن أم حبيبة بنت ميسرة عن أم كرز وسمع من عائشة وجابر بن عبدالله حبيب بن ثابت
المراسيل لابن أبي حاتم ج: 1 ص: 155
567 حدثنا محمد بن أحمد بن البراء قال قال علي يعني ابن المديني عطاء بن أبي رباح رأى أبا سعيد الخدري يطوف بالبيت ولم يسمع منه ورأى عبدالله بن عمرو ولم يسمع منه ولم يسمع من زيد بن خالد الجهني ولا من أم سلمة ولا من أم هانىء ولا من أم كرز شيئا
நூல் : இலலுல் மதீனீ பாகம் : 1 பக்கம் : 66
நூல் : அல்மராசீலு ­இப்னி அபீ ஹாத்தம் பாகம் : 1 பக்கம் : 155

இந்த ஹதீஸை
ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்களிடம் இருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார் இவர் ஸைது பின் காலிதில் ஜுஹனிய்யீ ரலி அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு செய்யத்

Thursday, 26 April 2018

#பலநாள்_நம்பி_வந்த #ஆதாரமற்ற_செய்தி

 وَأَخْبَرَنَا أَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو , حدثنا أَبُو مُحَمَّدٍ الْمُزَنِيُّ , حدثنا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عِيسَى , حدثنا أَبُو الْيَمَانِ , أَخْبَرَنِي شُعَيْبٌ , عَنِ الزُّهْرِيِّ قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ , أَنَّ أَوَّلَ شَيْءٍ عَتَبَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي لُبَابَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ أَنَّهُ خَاصَمَ يَتِيمًا لَهُ فِي عَذْقِ نَخْلَةٍ ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي لُبَابَةَ بِالْعَذْقِ ، فَضَجَّ الْيَتِيمُ وَاشْتَكَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي لُبَابَةَ : هَبْ لِي هَذَا الْعَذْقَ يَا أَبَا لُبَابَةَ ؛ لِكَيْ نَرُدَّهُ إِلَى الْيَتِيمِ ، فَأَبَى أَبُو لُبَابَةَ أَنْ يَهَبَهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا أَبَا لُبَابَةَ ، أَعْطِهِ هَذَا الْيَتِيمَ وَلَكَ مِثْلُهُ فِي الْجَنَّةِ ، فَأَبَى أَبُو لُبَابَةَ أَنْ يُعْطِيَهُ ، فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : يَا رَسُولَ اللَّهِ ، أَرَأَيْتَ إِنِ ابْتَعْتُ هَذَا الْعَذْقَ فَأَعْطَيْتُ الْيَتِيمَ أَلِي مِثْلُهُ فِي الْجَنَّةِ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : نَعَمْ ، فَانْطَلَقَ الْأَنْصَارِيُّ ، وَهُوَ ابْنُ الدَّحْدَاحَةِ ، حَتَّى لَقِيَ أَبَا لُبَابَةَ فَقَالَ : يَا أَبَا لُبَابَةَ ، أَبْتَاعُ مِنْكَ هَذَا الْعَذْقَ بِحَدِيقَتِي ، وَكَانَتْ لَهُ حَدِيقَةُ نَخْلٍ ، فَقَالَ أَبُو لُبَابَةَ : نَعَمْ ، فَابْتَاعَهُ مِنْهُ بِحَدِيقَةٍ ، فَلَمْ يَلْبَثِ ابْنُ الدَّحْدَاحَةِ إِلَّا يَسِيرًا حَتَّى جَاءَ كُفَّارُ قُرَيْشٍ يَوْمَ أُحُدٍ ، فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَاتَلَهُمْ فَقُتِلَ شَهِيدًا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رُبَّ عَذْقٍ مُذَلَّلٍ لِابْنِ الدَّحْدَاحَةِ فِي الْجَنَّةِ

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் ”அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்” என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று ”மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள்.

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்” என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நூல்: இஸாபா:7/289-290
ஸுனனுல் கபீர் பைஹகீ: 12007

முர்ஸல் ஹதீஸ்

இந்த செய்தி பலவீனமானது இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் #ஸயீத்_பின்_முஸையப் என்பவர் நபிதோழர் அல்ல நபி ஸல் காலத்தில் வாழ்த்தவர் கிடையாது இவர் தாபியி ஆகையால் இந்த செய்தி ஆதாரமற்ற செய்தியாகும்

سير أعلام النبلاء" (5/ 125)

இப்னு செய்யத்
#பலநாள்_நம்பி_வந்த #ஆதாரமற்ற_செய்தி

11126 وَأَخْبَرَنَا أَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو , حدثنا أَبُو مُحَمَّدٍ الْمُزَنِيُّ , حدثنا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عِيسَى , حدثنا أَبُو الْيَمَانِ , أَخْبَرَنِي شُعَيْبٌ , عَنِ الزُّهْرِيِّ قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ , أَنَّ أَوَّلَ شَيْءٍ عَتَبَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي لُبَابَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ أَنَّهُ خَاصَمَ يَتِيمًا لَهُ فِي عَذْقِ نَخْلَةٍ ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي لُبَابَةَ بِالْعَذْقِ ، فَضَجَّ الْيَتِيمُ وَاشْتَكَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي لُبَابَةَ : هَبْ لِي هَذَا الْعَذْقَ يَا أَبَا لُبَابَةَ ؛ لِكَيْ نَرُدَّهُ إِلَى الْيَتِيمِ ، فَأَبَى أَبُو لُبَابَةَ أَنْ يَهَبَهُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا أَبَا لُبَابَةَ ، أَعْطِهِ هَذَا الْيَتِيمَ وَلَكَ مِثْلُهُ فِي الْجَنَّةِ ، فَأَبَى أَبُو لُبَابَةَ أَنْ يُعْطِيَهُ ، فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : يَا رَسُولَ اللَّهِ ، أَرَأَيْتَ إِنِ ابْتَعْتُ هَذَا الْعَذْقَ فَأَعْطَيْتُ الْيَتِيمَ أَلِي مِثْلُهُ فِي الْجَنَّةِ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : نَعَمْ ، فَانْطَلَقَ الْأَنْصَارِيُّ ، وَهُوَ ابْنُ الدَّحْدَاحَةِ ، حَتَّى لَقِيَ أَبَا لُبَابَةَ فَقَالَ : يَا أَبَا لُبَابَةَ ، أَبْتَاعُ مِنْكَ هَذَا الْعَذْقَ بِحَدِيقَتِي ، وَكَانَتْ لَهُ حَدِيقَةُ نَخْلٍ ، فَقَالَ أَبُو لُبَابَةَ : نَعَمْ ، فَابْتَاعَهُ مِنْهُ بِحَدِيقَةٍ ، فَلَمْ يَلْبَثِ ابْنُ الدَّحْدَاحَةِ إِلَّا يَسِيرًا حَتَّى جَاءَ كُفَّارُ قُرَيْشٍ يَوْمَ أُحُدٍ ، فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَاتَلَهُمْ فَقُتِلَ شَهِيدًا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رُبَّ عَذْقٍ مُذَلَّلٍ لِابْنِ الدَّحْدَاحَةِ فِي الْجَنَّةِ

ஒரு அநாதை வாலிபருக்கும், நபித்தோழர் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கும் ஒரு பேரீத்தமரம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.

இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த வழக்கு கொண்டு வரப்பட்டது. அண்ணலார் இருவரையும் அழைத்து மரம் சம்பந்தமாக விசாரித்தார்கள்.

ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மரம் அபூலுபாபா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானது என்பதை அறிந்து கொண்ட நபி {ஸல்} அவர்கள் அபூலுபாபா (ரலி) அவர்களுக்கு உரியதென தீர்ப்பளித்தார்கள்.

இதைக் கேட்ட அந்த வாலிபரின் முகம் முற்றிலும் மாறிப்போய் விட்டது. அழுதார், இது நாள் வரை தமது சொந்தமெனக் கருதி வந்த மரம் தமக்குரியதாக இல்லை என்றதும் நிலைகுலைந்து போனார்.

அதைக் கண்ணுற்ற அண்ணலார், அந்த அநாதை வாலிபரின் வாழ்வில் இழந்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கொடுக்க விரும்பினார்கள்.

அபூலுபாபா (ரலி) அவர்களை அருகே அழைத்த நபி {ஸல்} அவர்கள் ”அந்த மரத்தை ஆதரவற்ற அந்த வாலிபருக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுங்களேன்” என்று தமது விருப்பத்தை விண்ணப்பித்தார்கள்.

ஆனால், அபூலுபாபா (ரலி) அவர்களோ தம்மால் அப்படி தர இயலாது என்று கூறி விட்டார்கள்.

நபி {ஸல்} அவர்கள் விடவில்லை. ”அபூலுபாபா அவர்களே! நீங்கள் அந்த மரத்தை அவருக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டீர்களென்றால், அதற்குப் பகரமாக சுவனத்தில் உங்களுக்கு மதுரமான கனிகள் தரும் ஓர் உயர்ந்த சோலையை பெற்றுத்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்” என்று கூறி மீண்டும் கேட்டார்கள்.

இரண்டாவது முறையாகவும் தம்மால் தர இயலாது என அபூலுபாபா (ரலி) அவர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு நபித்தோழரான அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள் நேராக அபூலுபாபா (ரலி) அவர்களின் அருகே சென்று ”மதீனாவின் இன்ன பகுதியிலே இருக்கிற 100 பேரீத்தமரங்கள் கொண்ட ஒரு சோலையை நான் தருகிறேன் எனக்கு அந்த ஒரு பேரீத்த மரத்தை தருவீர்களா?” என்று கேட்டார்கள்.

உடனடியாக, அதற்குச் சம்மதம் தெரிவித்தார் அபூலுபாபா (ரலி) அவர்கள். அடுத்து அதற்கான ஒப்பந்தமும் செய்து கொண்டார்கள்.

இப்போது, அபுத்தஹ்தாஹ் (ரலி) அவர்கள், மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அபூலுபாபா (ரலி) அவர்களிடம் இருந்து அந்த மரத்தை என்னுடைய நூறு பேரீத்தமரங்கள் நிறைந்த ஒரு சோலையை விலையாகக் கொடுத்து வாங்கி விட்டேன்.

அந்த ஆதரவற்ற வாலிபருக்கு அந்த மரத்தைக் கொடுத்து உங்களின் விருப்பத்தையும் நான் நிறைவேற்றுகின்றேன்!

ஆனால், நீங்கள் அவருக்கு அளித்த உத்தரவாதத்தை எனக்கும் அளிப்பீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அகமும், முகமும் மலர்ந்தவர்களாக ஆம்! உமக்கும் நான் அந்த உத்தரவாதத்தை தருகின்றேன்” என்று கூறினார்கள்.

பின்னர், அந்த வாலிபரை அழைத்து வாஞ்சையோடு அணைத்து அந்த மரம் இனி உமக்கு சொந்தமானது என்று கூறினார்கள்.

இதைக்கேட்ட அந்த வாலிபர் மிகவும் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நூல்: இஸாபா:7/289-290

முர்ஸல் ஹதீஸ்

இந்த செய்தி பலவீனமானது இந்த செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் #ஸயீத்_பின்_முஸையிப் என்பவர் நபிதோழர் அல்ல நபி ஸல் காலத்தில் வாழ்த்தவர் கிடையாது இவர் தாபியி ஆகையால் இந்த செய்தி ஆதாரமற்ற செய்தியாகும்

سير أعلام النبلاء" (5/ 125)

Saturday, 21 April 2018

#பல_நாள்_நம்பிவந்த #பலவீனமான_செய்தி

நபிதோழர்களில் ஸஃலபா இப்னு அப்துர்ரஹ்மான்.
ﻋﻦ ﺟﺎﺑﺮ : ﺃﻥ ﻓﺘﻰ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﺛﻌﻠﺒﺔ ﺑﻦ ﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦ ﺃﺳﻠﻢ ، ﻭﻛﺎﻥ ﻳﺨﺪﻡ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ، ﻓﺒﻌﺜﻪ ﻓﻲ ﺣﺎﺟﺔ ، ﻓﻤﺮ ﺑﺒﺎﺏ ﺭﺟﻞ ﻣﻦ ﺍﻷﻧﺼﺎﺭ ، ﻓﺮﺃﻯ ﺍﻣﺮﺃﺓ ﺍﻷﻧﺼﺎﺭﻱ ﺗﻐﺘﺴﻞ ﻓﻜﺮﺭ ﺇﻟﻴﻬﺎ ﺍﻟﻨﻈﺮ ، ﻭﺧﺎﻑ ﺃﻥ ﻳﻨﺰﻝ ﺍﻟﻮﺣﻲ ، ﻓﺨﺮﺝ ﻫﺎﺭﺑﺎً ﻋﻠﻰ ﻭﺟﻬﻪ ، ﻓﺄﺗﻰ ﺟﺒﺎﻻ ﺑﻴﻦ ﻣﻜﺔ ﻭﺍﻟﻤﺪﻳﻨﺔ ، ﻓﻮﺟﻠﻬﺎ ﻓﻔﻘﺪﻩ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﺭﺑﻌﻴﻦ ﻳﻮﻣﺎً ، ﻭﻫﻲ ﺍﻷﻳﺎﻡ ﺍﻟﺘﻲ ﻗﺎﻟﻮﺍ : ﻭﺩﻋﻪ ﺭﺑﻪ ﻭﻗﻠﻰ ، ﺛﻢ ﺃﻥ ﺟﺒﺮﻳﻞ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ ﻧﺰﻝ ﻋﻠﻰ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ : ﻳﺎ ﻣﺤﻤﺪ ﺇﻥ ﺭﺑﻚ ﻳﻘﺮﺋﻚ ﺍﻟﺴﻼﻡ ﻭﻳﻘﻮﻝ : ﺇﻥ ﺍﻟﻬﺎﺭﺏ ﻣﻦ ﺃﻣﺘﻚ
ﺑﻴﻦ ﻫﺬﻩ ﺍﻟﺠﺒﺎﻝ ﻳﺘﻌﻮﺫ ﺑﻲ ﻣﻦ ﻧﺎﺭﻱ ﻓﻘﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﻳﺎ ﻋﻤﺮ ، ﻭﻳﺎ ﺳﻠﻤﺎﻥ ﺍﻧﻄﻠﻘﺎ ﻓﺄﺗﻴﺎﻧﻲ ﺑﺜﻌﻠﺒﺔ ﺑﻦ ﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦ ﻓﺨﺮﺟﺎ ﻓﻲ ﺃﻧﻘﺎﺏ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ، ﻓﻠﻘﻴﺎ ﺭﺍﻋﻴﺎً ﻣﻦ ﺭﻋﺎﺓ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ﻳﻘﺎﻝ ﻟﻪ : ﺫﻓﺎﻓﺔ ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ ﻟﻪ : ﻳﺎ ﺫﻓﺎﻓﺔ ﻫﻞ ﻟﻚ ﻋﻠﻢ ﺑﺸﺎﺏ ﺑﻴﻦ ﻫﺬﻩ ﺍﻟﺠﺒﺎﻝ ﻳﻘﺎﻝ ﻟﻪ ﺛﻌﻠﺒﺔ ﺑﻦ ﻋﺒﺪﺍﻟﺮﺣﻤﻦ ، ﻓﻘﺎﻝ ﻟﻪ ﺫﻓﺎﻓﺔ : ﻟﻌﻠﻚ ﺗﺮﻳﺪ ﺍﻟﻬﺎﺭﺏ ﻣﻦ ﺟﻬﻨﻢ ، ﻓﻘﺎﻝ ﻟﻪ ﻋﻤﺮ : ﻭﻣﺎ ﻋﻠﻤﻚ ﺃﻧﻪ ﻫﺎﺭﺏ ﻣﻦ ﺟﻬﻨﻢ ، ﻗﺎﻝ : ﻷﻧﻪ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﺟﻮﻑ ﺍﻟﻠﻴﻞ ﺧﺮﺝ ﻋﻠﻴﻨﺎ ﻣﻦ ﻫﺬﻩ ﺍﻟﺠﺒﺎﻝ ﻭﺍﺿﻌﺎً ﻳﺪﻩ ﻋﻠﻰ ﺭﺃﺳﻪ ﻭﻫﻮ ﻳﻨﺎﺩﻱ ﻳﺎﻟﻴﺘﻚ ﻗﺒﻀﺖ ﺭﻭﺣﻲ ﻓﻲ ﺍﻷﺭﻭﺍﺡ ، ﻭﺟﺴﺪﻱ ﻓﻲ ﺍﻷﺟﺴﺎﺩ ﻟﻢ ﺗﺠﺮﺩﻧﻲ ﻟﻔﺼﻞ ﺍﻟﻘﻀﺎﺀ ﻓﻐﺪﺍ ﻋﻠﻴﻪ ﻋﻤﺮ ﻓﺎﺣﺘﻀﻨﻪ ﻓﻘﺎﻝ ﻟﻪ : ﺍﻷﻣﺎﻥ ﺍﻟﺨﻼﺹ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ ، ﻓﻘﺎﻝ ﻟﻪ : ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ! ﻗﺎﻝ : ﻧﻌﻢ . ﻓﻘﺎﻝ ﻟﻪ : ﻳﺎ ﻋﻤﺮ ؛ ﻫﻞ ﻋﻠﻢ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺬﻧﺒﻲ ؟ ﻓﻘﺎﻝ : ﻻ ﻋﻠﻢ ﻟﻲ ﺃﻧﻪ ﺫﻛﺮﻙ ﺑﺎﻷﻣﺲ ﻓﺄﺭﺳﻠﻨﻲ ﺃﻧﺎ ﻭﺳﻠﻤﺎﻥ ﻓﻲ ﻃﻠﺒﻚ ، ﻓﻘﺎﻝ : ﻳﺎ ﻋﻤﺮ ﻻ ﺗﺪﺧﻠﻨﻲ ﻋﻠﻴﻪ ﺇﻻ ﻭﻫﻮ ﻳﺼﻠﻲ ، ﺇﺫ ﺑﻼﻝ ﻳﻘﻮﻝ : ﻗﺪ ﻗﺎﻣﺖ ﺍﻟﺼﻼﺓ ، ﻗﺎﻝ : ﺃﻓﻌﻞ . ﻓﺄﻗﺒﻠﻮﺍ ﺑﻪ ﺇﻟﻰ ﺍﻟﻤﺪﻳﻨﺔ ، ﻓﻮﺍﻓﻮﺍ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻫﻮ ﻓﻲ ﺻﻼﺓ ﺍﻟﻐﺪﺍﺓ ﻓﺎﺑﺘﺪﺭ ﻋﻤﺮ ﻭﺳﻠﻤﺎﻥ ﺍﻟﺼﻒ ﻓﻠﻤﺎ ﺳﻤﻊ ﻗﺮﺍﺀﺓ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺮ ﻣﻐﺸﻴﺎً ﻋﻠﻴﻪ ﻓﻠﻢ ﺳﻤﻊ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ : ﻳﺎ ﻋﻤﺮ ﻭﻳﺎ ﺳﻠﻤﺎﻥ ﻣﺎ ﻓﻌﻞ ﺛﻌﻠﺒﺔ ، ﻗﺎﻻ : ﻫﻮ ﺫﺍ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠّﻪ ﻓﻘﺎﻡ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﺋﻤﺎً ﻓﺤﺮﻛﻪ ﻓﺎﻧﺘﺒﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠّﻪ ﻓﺄﺧﺬ ﺭﺃﺳﻪ ﻓﻮﺿﻌﻪ ﻋﻠﻰ ﺣﺠﺮﻩ ﻓﺄﺯﺍﻝ ﺭﺃﺳﻪ ﻋﻦ ﺣﺠﺮ ﺍﻟﻨﺒﻲ ﻓﻘﺎﻝ : ﻟﻢ ﺃﺯﻟﺖ ﺭﺃﺳﻚ ﻋﻦ ﺣﺠﺮﻱ ﻗﺎﻝ : ﺇﻧﻪ ﻣﻶﻥ ﻣﻦ ، ﻓﺄﻣﺮ ﺑﻐﺴﻠﻪ ﻭﺗﻜﻔﻴﻨﻪ ، ﻓﻠﻤﺎ ﺻﻠﻰ ﻋﻠﻴﻪ ﺟﻌﻞ ﻳﻤﺸﻲ ﻋﻠﻰ ﺃﻃﺮﺍﻑ ﺃﻧﺎﻣﻠﻪ ﻓﻠﻤﺎ ﺩﻓﻨﻪ ﻗﻴﻞ ﻟﻪ : ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠّﻪ ﺭﺃﻳﻨﺎﻙ ﺗﻤﺸﻲ ﻋﻠﻰ ﺃﻃﺮﺍﻑ ﺃﻧﺎﻣﻠﻚ ، ﻗﺎﻝ : ﻭﺍﻟﺬﻱ ﺑﻌﺜﻨﻲ ﺑﺎﻟﺤﻖ ﻣﺎﻗﺪﺭﺕ ﺃﻥ ﺃﺿﻊ ﻗﺪﻣﻲ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ ﻣﻦ ﻛﺜﺮﺓ ﺃﺟﻨﺤﺔ ﻣﻦ ﻧﺰﻝ ﻣﻦ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﻟﺘﺸﻴﻌﻪ .
ஸஃலபா என்ற அன்ஸாரி ஸஹாபி ஒருவர்.நபி சல் அவர்களின் செய்தி தொடர்பாளர்.அவர்களை நபி ஸல் அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.ஒரு அன்ஸாரிப்பெண் குளிக்கும் காட்சி எதார்த்தமாக இவர்களின் கண்ணில் பட்டுவிட்டது.மீ
ண்டும் தங்களின் பார்வையை அப்பக்கமாக திருப்பி பார்த்துவிடுகிறார்.அவ்வளவு தான் அச்சம் பிடித்துக்கொ ள்கிறது.அல்லாஹ் என்மீது கோபம் கொண்டு வஹி ஏதும் இறக்கிவிடுவா னோ என்ற பயத்தில் மலையை நோக்கி ஓடுகிறார்.
நாற்பது தினங்களுக்கு பின்னால் ஒரு நாள் ஜிப்ரயீல அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அல்லாஹ்வின் ஸலாமை எடுத்துச்சொல்லி விட்டு உங்களில் ஒருவர் தவ்பாவை தேடி நரகை விட்டும் பாதுகாவல் தேடி மலை உச்சியிலிர்ந்து கதறுகிறார் என்ற செய்தியை அல்லாஹ் உங்களுக்கு எத்திவைக்கச்சொன்னான் என்றார்கள்.
உடனே நபி ஸல் அவர்கள் தம் தோழர்களில் உமர் ரலி,ஸல்மான் ரலி ஆகிய இருவரையும் அனுப்பி வைத்து ஸஃலபாவை கண்டுபிடித்து தன்னிடம் அழைத்து வரச்சொன்னார்கள்
.அவ்விருவரும் மதீனாவின் தெருக்களில் எல்லாம் தேடி அலைந்து இறுதியில் மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் இடையனிடம் விசாரித்தார்கள்.
அந்த இடையன்,நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிற அந்த இளைஞரையா நீங்கள் தேடுகிறீர்கள்?எ
ன்றதும்-அவர் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுகிறவர் என்று நீர் எப்படி தெரிந்து கொண்டீர் என அந்த இரு ஸஹாபாக்களும் கேட்டபோது-
நடுஇரவில் மலையிலிருந்து இறங்கி வந்து அழுதவராக துஆச்செய்ய பார்த்திருக்கிறேன் என்று பதில் கூறினார்.
ஒருவழியாக உமர் ரலி அவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து அவருக்காக காத்திருக்கிறார்கள்.அவர் மலயிலிருந்து கீழே இறங்கியதும் அவரை பிடித்து விடுகிறார்கள்.
அப்போது அவர்,நரகிலிருந்து நான் தப்பிக்க முடியுமா?என்று கேட்கிறார்கள். அதற்கு உமர் ரலி ஆம் நீ நரகிலிருந்து பாதுகாக்கப்படுவாய் என்றார்கள்.
உமரே!நான் செய்த பாவத்தை பற்றி நபிக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்டார்கள்.அதைபற்றி எனக்கு தெரியாது,உங்களை தேடி கண்டுபிடித்து கொண்டுவரச்சொல்ல
ி பெருமானார் உத்தரவிட்டார்கள
்.என்று உமர் ரலி அவர்கள் கூறியதும்-நாயத்தை பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது,எனவே நபி ஸல் தொழுதுகொண்டிருக்கும்போது என்னை அங்கு அழைத்துச்செல்லு
ங்கள்.என்றார்கள்.
நபி ஸல் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது பின்னால் சேர்ந்துகொண்ட அவர்கள் தொழுகையின் இடையில் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த நபி ஸல் அவர்கள் அவரின் தலையை தூக்கி தன் தொடையில் வைத்தபோது –மயக்கம் தெளிந்த அந்தஸஹாபி தன் தலையை கீழே வைக்கிறார்கள்.அ
ல்லாஹ்வின் தூதரே உங்களின் முபாரக்கான மடியில் தலைவைக்கும் தகுதி எனக்கு இல்லை நான் பெரும்பாவி என்றார்கள்.
இறுதியில் அந்த பாவத்தை நினைத்து அவர்களின் ரூஹும் பிரிந்து விடுகிறது.
அவரை குளிப்பாட்டி,கபன் செய்து தொழவைத்து அடக்கம் செய்துமுடித்த நபி ஸல் அவர்கள், இந்த ஸஹாபியின் ஜனாஸாவில் ஏராளமான மலக்குகள் கலந்துகொண்டார்கள்.என்று

இந்த செய்தி பல நூலில் வருது

உதாரணம் இமாம் அபூ நயீம் மஃரிபது ஸஹாபா:1/498 - 1410

வருகிறது இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர்👇

 من طريق عن منصور بن عمار ثنا أبي عن المنكدر بن محمد بن المنكدر عن أبيه عن جابر بن عبدالله –رضي الله عنهما- به.


இந்த அறிவிப்பாளர் வரிசையில்

மன்சூர் பின் அமார் என்பவார் பலவீனமானவர்

 منصور بن عمار
قال أبو حاتم : ليس بالقوي وقال ابن عدي: منكر الحديث .
ஆபூ ஹாதம் இவரை பலமானவர் இல்லை என்று கூறுகிறார்

இமாம் இப்னு அதீ இவரை பலவீனமானவர் என்று கூறிவுள்ளார் இன்னும் பல இமாம்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்

மற்றோர் அறிவிப்பாளர்

முன்கதிர் பின் முஹ்ம்மத் என்பவரும் பலவீனமானவர் என்று

அபூ ஸுர்ஆ,அபூ ஹாதம்,நஸாயீ,இப்னு ஹிப்பான் போன்றோர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்

தஹ்தீபுல் காமில்: 28/562

இப்னு செய்யத்

Sunday, 15 April 2018

#பலவீனமான_ஹதீஸ்

حدثنا أبو النضر حدثنا أبو عقيل يعني الثقفي حدثنا مجالد بن سعيد عن عامر عن مسروق عن عائشة قالت حدث رسول الله صلى الله عليه وسلم نساءه ذات ليلة حديثا فقالت امرأة منهن يا رسول الله كان الحديث حديث خرافة فقال أتدرون ما خرافة إن خرافة كان رجلا من عذرة أسرته الجن في الجاهلية فمكث فيهن دهرا طويلا ثم ردوه إلى الإنس فكان يحدث الناس بما رأى فيهم من الأعاجيب فقال الناس حديث خرافة قال أبي أبو عقيل هذا ثقة اسمه عبد الله بن عقيل الثقفي

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்த செய்தி:
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தவர்களோடு அமர்ந்திருக்கையில், (நம்புவதற்குக் கடினமான) ஒரு செய்தியைக் கூறினார்கள். அப்போது பெண்களுள் ஒருவர், “இந்தச் செய்தி ஃகுராஃபா கதைகளைப் போல் (நம்ப முடியாத கதை போல்) அல்லவா இருக்கிறது?” என்று நபியவர்களைப் பார்த்துக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஃகுராஃபா பற்றிய உண்மைக் கதை என்னவென்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டு விட்டுத் தொடர்ந்து கூறினார்கள்: “ஃகுராஃபா என்பது பனூ உத்ரா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் பெயர். அவரை ஒருமுறை ஜின்கள் கடத்திச் சென்று விட்டார்கள். கடத்திச் சென்ற ஜின்கள் அவரைச் சில காலம் தம்மோடு வைத்துக் கொண்டார்கள். பிறகு அவரை மீண்டும் மக்களிடம் விட்டு விட்டுச் சென்றார்கள். அங்கு (ஜின்களோடு) தங்கியிருந்த போது நடந்த பல விசித்திரமான நிகழ்வுகளைப் பற்றி அவர் மக்களுக்குக் கூறினார். மக்கள் அதைக் கேட்டு (நம்ப முடியாமல்) ஆச்சரியமடைந்தனர். இது முதல், ஆச்சரியப்படத்தக்க கதைகளுக்கெல்லாம் ஃகுராஃபாவின் கதைகள் என்று கூறுவதை மக்கள் பிற்காலத்தில் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.”
ஷமாஇல் முஹம்மதியா (திர்மிதி): பாடம் 38, ஹதீஸ் 252

மற்றும் முஸ்னத் அஹ்மத் : 24716 உள்ளன

இதுவும் போலியான செய்தியாகும். இச்செய்தியில் முஜாலித் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகின்றார். இவரைப் பற்றி அறிஞர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் முஜாலிதை பலவீனப்படுத்தியதாக இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இமாம் இப்னு ஹிப்பான் 'முஜாலிதை ஆதாரமாக ஏற்கக் கூடாது'இமாம் அபூ ஹாதம் யஹ்யா பின் மயீன் ஆகீயோர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்  எனக் கூறுகின்றார். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் 10ம் பாகம் 41ம் பக்கம்)