#உமர்_ரலி_அவர்களின்_பெயரில்_பரப்பப்படும் #பொய்யான_செய்தி
இந்த செய்தி பல நாள்க்கலாக முகநூல் வாட்சபிலும் பரவி வருகின்றன இது பொய்யான செய்தியாகும்.
🚫قصة مكذوبة قطعا ولا يجوز نشرها 🚫
أتى شابّان إلى الخليفة عمر بن الخطاب رضي الله عنه
وكان في
المجلس وهما يقودان رجلاً من البادية فأوقفوه أمامه
قال عمر: ما هذا ؟
قالوا : يا أمير المؤمنين ،
هذا قتل أبانا
قال: أقتلت أباهم ؟
قال: نعم قتلته ! ............... إلخ
بارك الله فيكم
هذه القصة مكذوبة قطعا
فكيف يقيم عمر الحد على انسان الله عنهما دون جناية
للأسف هذه القصة متداولة في المنتديات فلا يجوز ذكرها الا لبيان كذبها
فتوى
السؤال : ما مدى صحة قصة ذكرها بعض الدعاة في أحد دروسه ومنتشرة عبر الإنترنت عن عمر بن الخطاب مع ثلاثة أشخاص أمسكوا بشاب قتل أباهم ....؟
رقم الفتوى : 628.
الجواب : هذه القصة منتشرة و هي باطلة
و هذه القصة لم أقف عليها في أي كتاب ، فلو أنها حدثت مع صحابي لذكرت في كتب الحديث أو كتب التاريخ و السير أو التراجم ، فهذه القصة ليس لها أصل و هي مكذوبة قطعا مع ما فيها من النكارة الظاهرة فكيف يقيم عمرُ الحدّ على أبي ذر رضي الله عنهما دون جناية لكن بمجرد الكفالة !!
فأين ذهب فقه الصحابة رضي الله عنهم ؟؟!!!
و هل يجوز شرعا أن ينوب أحد عن أحد في إقامة الحد ؟؟؟!!
قبّح الله من وضعها !!! و لم يستح مَن وضعها بقوله [ و كل الناس كانت قلقله على أبي ذر حتى لا يقام عليه الحد ] !!!
وهذه القصة متداولة في المنتديات فلا يجوز ذكرها إلا ببيان كذبها .
இஸ்லாமிய பேரரசின் கலீஃபா உமர் ரலி யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...
அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...
"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...
உடனே, அபு தர் (ரலி) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்.
அப்போது உமர், "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் சொல்கிறார்...
அபுதரும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்...
தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நாள் அஸர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...
இரண்டு நாட்கள் ஓடியது.
மூன்றாவது நாள் வந்தது. அஸர் (மாலை) தொழுகை நடைபெற்றது.
எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...
நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...
தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...
தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....
உமர் அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்...?? என கேட்கிறார்.
அதற்கு அவர் " முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார், என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...
அடுத்து அபு தரிடம் "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்...??" என்று கேட்டார் உமர்..
உடனே அபூதர் "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ, என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்...
பின்னர் உமர் சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...
குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார். ஏனென்று கேட்டதற்கு "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்...
"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு கலீஃபாக என்னை ஏற்படுத்திய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்" என கண்ணீர் மல்க கூறினார் உமர் ரலி
- قال الإتليدي في كتابه : قال القاضي شرف الدين حسين بن ريان وبينهما 400 سنة
- قال القاضي شرف الدين حسين بن ريان : قال أغرب ما سمعته من الأخبار، وأعجب ما سمعته عن الأخيار...ثم ذكر القصة وبينه وبين الصحابة 700 سنة تقريبا دون أن يذكر رجلا واحدا ممن روى عنه
மேற்கண்ட செய்தி முகநூலில் பல நாட்களாகவே பரவி வருகிறது.
இந்த செய்தியானது அல் இத்லீதி என்பவரது இஃலாமுன் நாஸ் என்ற நூலில் காழி ஷறபுத்தீன் என்பவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இத்லீதி அவர்களுக்கும் காழி ஷரபுத்தீன் அவர்களுக்கும் இடையில் 400 வருட கால இடை வெளி உள்ளது.
காழி ஷறபுத்தீன் அவர்களுக்கும் நபித்தோழர்கள் காலத்திற்கும் 700 வருடங்களுக்கும் அதிகமான கால இடை வெளி உள்ளது. ஆக இந்த செய்தியை ஆதாரப்பூர்வமான செய்தியை கருதி கொள்ள எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை .
நபித்தோழர்களை குறிப்பிடும் செய்தியாக இருந்தாலும் அது ஆதாரமில்லாத சந்தேகத்திற்குறிய செய்தியாக இருக்க கூடாது.
இந்த செய்தியை ஆதாரப்பூர்வமான செய்தியாக நினைத்து முகநூலில் பதிவு செய்பவர்களிடம் நாம் இது குறித்து ஆதாரத்தை கேட்டால் சரியான பதில் தருவதை விடுத்து கிண்டலான தோணியில் பதில் தருகிறார்கள்.
நல்ல செய்திதானே என்பதற்காக விரும்பியவாறு பரப்பிவிடுகிறார்கள்.
இவ்வாறு ஆதாரமில்லாத செய்தியை முகநூலில் பரப்புபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . நபிகளார் அறிவித்ததாக ஒரு சில செய்திகள் சஹாபாக்களிடம் கொண்டு வரப்பட்டபோது கூட அது நபிகளாரால் அறிவிக்கப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் கிடைக்கும் வரையிலும் அதை பின்பற்றிவிட கூடாது என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருந்திருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு ஈமானிய உணர்வுகளோடு வாழ்ந்த சஹாபாக்கள் குறித்து் நமக்கு ஒரு செய்தி கிடைக்கும் போது எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தோணியில் பரப்பி மகிழாமல் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும்.
என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கிவிடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல் : திர்மிதி : 3797
