Friday, 2 March 2018

#பலவீனமான_ஹதீஸ்

ஜும்ஆ அஸருக்குப்பின் ஸலவாத்

اللهم صل على محمد الننبي المي و على آله و سلم تسليماً

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி  வ அலா வ ஸல்லிம் தஸ்லிமா......

அறிவிப்பாளர் :ஹஜ்ரத்  அபூ ஹுரைரா (ரழி) 
கூறியவர் :நபி (ஸல்)

எவர் ஜும்ஆ நாள் அவருடைய தொழுகைக்குப் பின்  தொழுத இடத்தை விட்டு நீக்குவதற்கு முன் இந்த ஸலவாத்தை 80 முறை ஓதுவாரோ அவரின் 80 வருட பாவங்கள் மன்னிக்கப்படும்...
80 வருட வணக்கத்தின் நன்மைகள் கிடைக்கும்........

ஆதாரம் :பைஹகீ

இந்த ஹதீஸ் பலவீனமானதாகும் இதில் வரும் அறிவிப்பாளர் ( அலி பின் ஸைத்)  பலவீனமானவர்

وَقَالَ أَحْمد : لَيْسَ بِشَيْء ، وَقَالَ أَبُو زرْعَة : لَيْسَ بِقَوي يهم ويخطئ ، وَقَالَ أَبُو حَاتِم : لَا يحْتَج بِهِ ، وَقَالَ الدَّارَقُطْنِيّ : لَا يزَال عِنْدِي فِيهِ لين

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் அலி பின் ஸைத் பின் ஜ‎ýத்ஆன் என்பவர் இடம் பெருகிறார் இவரை அஹமத் பின் ஹன்பல் இமாம் தாரகுத்னீ இமாம் அபூ ஹாதம் போன்றோர் விமர்சித்துள்ளனர். (நூல் மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 156)

حجاج بن سنان .
" قال عنه الأزدي : متروك ". ينظر: 

ஹஜ்ஜாஜ் பின் ஸினான் என்ற அறிவிப்பாளரும் பலவீனமானவர் 

லிஸானுல் மீஸான் 2/563


No comments:

Post a Comment