Wednesday, 14 March 2018

#பலவீனமான_ஹதீஸ்

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ : ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ : أَحَدُهُمَا عَابِدٌ، وَالْآخَرُ عَالِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ، وَمَلَائِكَتَهُ، وَأَهْلَ السَّمَاوَاتِ، وَالْأَرَضِينَ، حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا، وَحَتَّى الْحُوتَ ؛ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ

ஒருவர் வணக்கசாலி ; மற்றொருவர் அறிஞர் இவ்விருவர் பற்றி நபி( ஸல் ) அவர்களிடம் கூறப்பட்ட போது ,

வணக்க சாலியை விட அறிஞனின் சிறப்பு ,உங்களில் மிக தாழ்ந்து உள்ளவரை விட எனக்குரிய சிறப்பு போன்றதாகும்.

என்று நபி ( ஸல் ) கூறினார்கள் . பின்பு “ நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பவனுக்கு அருள் புரிகிறான். வானவர்களும் ,வானில் ,பூமியில் உள்ளோரும் ,பொந்தில் உள்ள எறும்பும் ,மீன்களும் அவனுக்கு அருள் கிடைக்க து ஆ ச் செய்கின்றார்கள் என்று நபி ( ஸல் ) கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ ( 2685)

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அல்வலீத் பின் ஜமீல் என்பாரும் ஸலமா பின் ரஜா என்பாரும் பலவீனமானவர்கள் ஆவர்.

குறிப்பாக அல்வலீத் பின் ஜமீல் என்பார் அல்காஸிம் இப்னு அப்திர்ரஹ்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கத்தக்கவை என இமாம் அபூ ஹாதிம் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்குரிய சான்றுகள் வருமாறு

تهذيب الكمال - (ج 31 / ص 7)
6700 - بخ ت ق الوليد بن جميل بن قيس القرشي ويقال الكندي ويقال الكناني أبو الحجاج الفلسطيني يمامي الأصل روى عن القاسم أبي عبد الرحمن بخ ت ق ومكحول الشامي ويحيى بن أبي كثير  روى عنه سلمة بن رجاء ت ق وصدقة بن عبد الله السمين وأبو النضر هاشم بن القاسم ويزيد بن هارون بخ ت فق قال أبو الحسن بن البراء عن علي بن المديني الوليد بن جميل لا أعلم روى عنه غير يزيد بن هارون قلت له كيف أحاديثه قال تشبه أحاديثه أحاديث القاسم أبي عبد الرحمن ورضيه وقال أبو زرعة شيخ لين الحديث وقال أبو حاتم شيخ يروي عن القاسم أحاديث منكرة وقال أبو عبيد الآجري سألت أبا داود عن الوليد بن جميل صاحب القاسم فقال دمشقي ليس به بأس قال يزيد بن هارون ما رأيت شاميا أسن منه قال أبو داود يقال أصله فلسطيني وذكره بن حبان في كتاب الثقات وقال أبو أحمد بن عدي وهو راو له عن القاسم أبي عبد الرحمن ولم أجد له عن غير القاسم شيئا روى له البخاري في الأدب والترمذي وبن ماجة
அல்வலீத் பின் ஜமீல் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூ சுர்ஆ கூறியுள்ளார்.

இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்.

நூல் தஹ்தீபுல் கமால்: பாகம் 31 பக்கம் 7

ஸலமா பின் ரஜா என்ற அறிவிப்பாளரையும் பல்வேறு இமாம்கள் குறைகூறியுள்ளனார்.

ميزان الاعتدال - (ج 2 / ص
3395 - سلمة بن رجاء [ خ، ت، ق ] الكوفى. عن إبراهيم بن أبى عبلة وغيره. قال أبو زرعة: صدوق. وقال عباس، عن يحيى: ليس بشئ. وقال النسائي: ضعيف. وقال ابن عدى: حدث بأحاديث لا يتابع عليها،

இவர் ஒருபொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என இமாம் யஹ்யா பின் முயீன் விமர்சித்துள்ளார்.

இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

துணைச் சான்றாக கொள்ள முடியாத ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என இமாம் இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

No comments:

Post a Comment